பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி - விராட் கோலியின் சாதனை
12 புரட்டாசி 2023 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 8794
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 4 போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கோலி மற்றும் கே எல் ராகுல் சாதனை படைத்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் எடுத்தது.
சிறப்பாக விளையாடிய கோலி 122 ஓட்டங்களும், கே எல் ராகுல் 111 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக பார்ட்னர்ஷிப்பில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இருவரும் இணைந்துள்ளனர்.
கோலி மற்றும் கே எல் ராகுல் இணைந்து 233 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இதுதவிர குறைந்த இன்னிங்ஸில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan