எரிபொருட்களின் விலையில் இவ்வாண்டு இறுதிவரை மாற்றம் இல்லை TotalEnergies.

12 புரட்டாசி 2023 செவ்வாய் 08:43 | பார்வைகள் : 16167
பிரான்ஸ் தேசத்தில் என்றுமில்லாத அளவில் எரிபொருட்களின் விலை நாளாந்தம் ஏறிச் செல்கின்றது, டீசல் லீட்டருக்கு இரண்டு Eurosகளை தாண்டியுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விற்பனை நிலையங்களின் நிறுவனத் தலைவர்களை சந்தித்த நிதியமைச்சர் Bruno Le Maire விலையேற்றம் பற்றி கலந்துரையாடி வருகிறார்.
இதன்போது பிரான்சின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள TotalEnergies நிறுவனம், கடந்த February மாதத்தில் அறிவிக்கப்பட்ட 1.99 euroவுக்கு மேல் விலையேற்றம் இல்லாத தங்களின் அறிவிப்பை இவ்வருட இறுதிவரை கடைப்பிடிக்க போவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி நாடுமுழுவதும் உள்ள 2 600 TotalEnergies எரிபொருள் விற்பனை நிலையங்களில் sans-plomb 95, sans-plomb 98 மற்றும் diesel ஆகியவற்றின் விலை 1.99 eurosவுக்கு அதிகமாகாமல் இருக்கும் என தெரியவருகிறது.
தொடர்ந்தும் மற்றைய எரிபொருள் விற்பனை நிறுவனங்களுடன் தாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1