இலங்கையில் ரயில் பணிப்புறக்கணிப்பு எதிரொலி - பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

12 புரட்டாசி 2023 செவ்வாய் 06:04 | பார்வைகள் : 8111
ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதியதாக தெரிவிக்கப் படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் ஒன்று நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, தற்போது இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் அதிகளவில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1