Paristamil Navigation Paristamil advert login

Nogent-sur-Marne : சுரங்கப்பாதைக்குள் தீப்பிடித்து எரிந்த இரண்டு மகிழுந்துகள் - ஒருவர் கவலைக்கிடம்

Nogent-sur-Marne : சுரங்கப்பாதைக்குள் தீப்பிடித்து எரிந்த இரண்டு மகிழுந்துகள் - ஒருவர் கவலைக்கிடம்

12 புரட்டாசி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 10839


Nogent-sur-Marne நகரை ஊடறுக்கும் A86 நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் பயணித்த இரண்டு மகிழுந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. 

நேற்று திங்கட்கிழமை மாலை 6.55 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பயணிகளுடன் பயணித்த இரண்டு மகிழுந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தீயணைப்பு படையினர் மிக விரைவாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

20 பேர் மீட்க்கப்பட்டனர். மேலும் எட்டுப்பேர் புகையினை சுவாசித்து மூச்சுத்திணறலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 தீயணைப்பு படையினர் இணைந்து இரவு 8.15 மணி அளவில் தீயை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் பயணி ஒருவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேவேளை, தீயணைப்பு படை வீரர் ஒருவரும் இலேசான காயங்களுக்கு உள்ளானார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்