விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும்; சீமான்
14 புரட்டாசி 2023 வியாழன் 16:29 | பார்வைகள் : 9205
விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் ஆணையரகத்தில் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக ஒரே நேரத்தில் மூன்று பேரிடம் விசாரணை நடத்த வேண்டும். நான் விசாரணைக்கு வரும் போது எனக்கு எதிராக காணொலிகளை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.
கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் இருப்பதால் ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியமானது. விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரின் குற்றச்சாட்டுக்கள் உண்மையும் அடிபடையும் இல்லை. பொதுவெளியில் என்னைப் பற்றி பேசி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையை செய்கின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan