கனடாவில் மீண்டும் மாஸ்க் அணிவதற்கான சாத்தியம்

14 புரட்டாசி 2023 வியாழன் 09:55 | பார்வைகள் : 11461
கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், மீண்டும் மாஸ்க் அணிந்தபடி பங்கேற்றனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது.
கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் மாஸ்க் அணிந்தபடி, சமூக இடைவெளியையும் பின்பற்றியபடி பங்கேற்றனர்.
எதனால் மாஸ்க் அணிந்துள்ளீர்கள் என தலைமை பொது சுகாதார அலுவலர் Dr. தெரஸாவிடம் (Dr. Theresa Tam) கேட்டபோது, கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனது சகப் பணியாளர்கள் சிலருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது மீண்டும் மாஸ்க் அணியத்துவங்குவதற்கான நேரம் என்று கூறிய Dr. தெரஸா, மாஸ்க் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு விடயம்.
சுவாசக்கோளாறுகளை உருவாக்கும் வைரஸ்கள் பரவும் காலகட்டத்தில், தேவைப்படும்போது மாஸ்க் அணியும் பழக்கம் மக்களிடம் தானாகவே வந்துவிட்டது என்று கருதுகிறேன்.
கொரோனா தொற்றுக்காக மட்டுமல்ல, பிற சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மாஸ்க் உதவியாக இருக்கும் என்றார்.
உங்களிடம் மாஸ்க் இல்லையென்றால், அவற்றை தயார் செய்வதற்கான நேரம் இது என்று நான் கருதுகிறேன் என்கிறார் அவர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025