விசேட செய்தி : Fleury-Mérogis சிறைச்சாலை கைதிகள் இருவர் மாயம்
13 புரட்டாசி 2023 புதன் 14:58 | பார்வைகள் : 21888
Fleury-Mérogis சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் குறைத்த சிறைச்சாலையில் இருந்துகைதிகள் சிலர் Fontainebleau (Seine-et-Marne) காட்டுப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். குறித்த காட்டுப்பகுதியில் ஓய்வுக்காக சில நடவடிக்கைகளில்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்போது ஓட்டப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட குறித்த இரு கைதிகள்அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
கைதிகள் தப்பி ஓடியுள்ளதை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan