இலங்கையில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு

13 புரட்டாசி 2023 புதன் 10:39 | பார்வைகள் : 9795
இலங்கையில் ஹொரபே புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் தினித் இந்துவர பெரேராவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறான விபத்து தொடர்பான இழப்பீடு வழங்குவதற்கான சட்டப் பின்னணி இல்லாத போதிலும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இத்தொகை இன்று உயிரிழந்த இளைஞரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1