Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸை வீழ்த்திய ஜேர்மனி அணி.... தாமஸ் முல்லரின் அபார கோல்

பிரான்ஸை வீழ்த்திய ஜேர்மனி அணி.... தாமஸ் முல்லரின் அபார கோல்

13 புரட்டாசி 2023 புதன் 08:01 | பார்வைகள் : 6608


சர்வதேச நட்புமுறை கால்பந்து போட்டியில் ஜேர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.

ஜேர்மனியின் சிக்னல் இடுனா பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே ஜேர்மனியின் தாமஸ் முல்லர் அபாரமாக கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து 87வது நிமிடத்தில் மற்றொரு ஜேர்மனி வீரர் லெரோய் சானே மிரட்டலாக கோல் அடித்தார். 

89வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி அணி வாய்ப்பு கிடைத்தது. 

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேப்டன் கிரீஸ்மன் கோலாக மாற்றினார். 

ஆனால் அதற்கு மேல் பிரான்ஸ் அணியை கோல் அடிக்க ஜேர்மனி விடவில்லை. 

இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் பிரான்ஸ் அணி தனது வலுவான வீரரான கைலியன் எம்பாப்பேயை களமிறக்கவில்லை. 

அவர் போட்டியை தனது அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

இது அவருக்கு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்