Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் பெண் ஒருவரின் மோசமான செயல் - ஏமாற்றப்பட்ட மக்கள்

கொழும்பில் பெண் ஒருவரின் மோசமான செயல் - ஏமாற்றப்பட்ட மக்கள்

13 புரட்டாசி 2023 புதன் 07:59 | பார்வைகள் : 9466


தம்மை காவல்துறை உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
 
24 வயதுடைய குறித்த பெண் கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
 
மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பெண் முறைப்பாட்டாளர்களிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் பணத்தை பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
அத்துடன் சந்தேகநபரான குறித்த பெண் போலி அடையாள அட்டை மற்றும் பொலிஸ் தலைமையகத்தின் முகவரியில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் என்பவற்றின் படங்களை வாட்ஸ்அப் மூலம் முறைப்பாட்டாளர்களுக்கு அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்