நல்லுாரில் ஏற்பட்ட பதற்ற நிலை - வீதித்தடையால் பலர் மயக்கம்
13 புரட்டாசி 2023 புதன் 02:15 | பார்வைகள் : 10391
நல்லுார் வீதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சப்பரத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லுாரில் திரண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆனாலும் நல்லுார் பின் வீதியில் இருந்த வீதித்தடையால் ஒருவர் மாத்திரமே நுழைவதற்கு வசதி ஏற்படுத்தி யாழ் மாநகரசபை நிர்வாகம் தடை விதித்திருந்தது.
பின் வீதிமட்டுமல்லாமல் நல்லுாரில் உள்ள நுழைவாயில்கள் அனைத்திலும் ஒரு சிலரே ஒரே நேரத்தில் நுழைவதற்கான ஏற்பாடுகளை யாழ் மாநகரபை ஏற்படுத்தியருந்தது.
இந் நிலையில் திரண்ட அடியவர்களால் வீதியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் சன நெருக்கடியில் சிக்கி சிறுவர் சிறுமிகள் சிலர் மயக்கமடைந்துள்ளார்கள்.
இவர்களை வீதியை விட்டு அப்புறப்படுத்துவதற்கு வீதித்தடை பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது. அதனை அகற்ற கோரியும் மாநகரசபையினர் மறுத்துவிட்டனராம்.
இதனால் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பக்தர்களால் வீதித்தடை அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் மாநகரசபை ஆணையாளர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவர் அந்த இடத்திலிருந்து ஓடித்தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெரிசலில் கர்பிணிப் பெண்கள் இருவர் சிக்கிய நிலையில் பின் MOH அலுவகத்திற்குள் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டனர்.


























Bons Plans
Annuaire
Scan