கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய ஐவர்
11 ஆடி 2023 செவ்வாய் 15:29 | பார்வைகள் : 12865
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 162 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 தங்க கட்டிகள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா குறிப்பிட்டார்.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டு செல்ல முற்பட்ட போதே சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீர்கொழும்பை சேர்ந்த ஐந்து வர்த்தகர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்காபரணங்களுடன் இருவர் கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan