வெளிநாடு ஒன்றில் மனைவியை கொலை செய்த இலங்கையர்

11 புரட்டாசி 2023 திங்கள் 07:32 | பார்வைகள் : 8869
சிங்கப்பூரின் – கட்ரோங்கில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்ரோங்கில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த பெண்ணின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்ட பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வெட்டுக் காயங்களுடன் ஹோட்டலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரி (வயது 32) என்ற பெண்ணே உயிரிழந்ததுடன், அவரது 30 வயதுடைய கணவரான இஷான் தாரக கொடகே என்ற சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் அவரை ஒருவாரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025