Maroc நிலவரம் குறித்து மன்னர் Mohammed VI அவர்களுடன் பிரான்ஸ் அரசதலைவர் Emmanuel Macron உரையாடியுள்ளார்.
10 புரட்டாசி 2023 ஞாயிறு 17:10 | பார்வைகள் : 19252
மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 2122 பேர் பலியாகியுள்ளனர்.நிலநடுக்கம் ஏற்பட்ட மையம் அமைந்துள்ள d'al-Haouz மாகாணத்தில் 1,293 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் Taroudant மாகாணத்தில் 452 பேர் உயிரிழந்துள்ளனர். என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே கூறப்படுகிறது. பிரான்ஸ் பிரஜைகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 15 பேயர் வரை படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
பெரிதும் பாதிக்கப்பட்டது. மராகேச்சின் தென்மேற்கே அமைந்துள்ள மேல் குறியீடு மாகாணங்களில் உள்ள இரண்டு கிராமங்கள் நிலநடுக்கத்தால் ஏறத்தாழ முழுவதும் அழிந்துள்ளன.
மக்கள் வீதிகளிலும், திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்றையதினம் பிரான்ஸ் அரசதலைவர் Emmanuel Macron மொராக்கோவின் மன்னர் Mohammed VI அவர்களுடன் தொலைபேசியில் உரையாட யுள்ளார். அதன் போது "பிரான்ஸ் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை எத்தகைய உதவிகளை மொராக்கோ எதிர்ப்பார்க்கிறது என்பதை அவர்கள் அறிவிக்காமலே இருப்பதாக தெரியவருகிறது.
மொரோக்கோ மன்னர் Mohammed VI அவர்கள் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan