Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

10 புரட்டாசி 2023 ஞாயிறு 12:34 | பார்வைகள் : 10960


அமெரிக்காவின் கென்டக்கி பகுதியை சேர்ந்த அமெஸ் கியூன் என்பவர் ஜெபர்சன் கவுண்டி பொதுப் பள்ளி ஒன்றில் பேருந்து சாரதியாக பணி புரிந்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில்  கென்டக்கி லொட்டரி பவர்பாலில் சரியான நான்கு வெள்ளை பந்துகளை எடுத்ததன் மூலம் சுமார் 1,00,000 டொலர் லொட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அமெஸ் கியூன் தெரிவிக்கையில்,

நான் லொட்டரியை பல முறை பார்த்தேன், எண்கள் மாறுகிறதா என்று, ஆனால் அது மாறவில்லை, நான் வெற்றி பெறுவதையே மிகவும் நல்லது என்று எண்ணிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தான் லொட்டரியில் வெற்றி பெற்றவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக தனது தினசரி வேலையில் இருந்து வெளியேறுவது தொடர்பாக முதலாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

அதில், நான் லொட்டரியில் வெற்றி பெற்றுள்ளேன்.

மேலும் நான் வேலைக்கு திரும்பி வரப்போவது இல்லை என்று தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நான் எனது வேலையை மிகவும் நேசிக்கிறேன்.

ஆனால் இந்த லொட்டரியின் மூலம் சிறிது முன்கூட்டியே ஓய்வு பெறுவதை குறித்து யோசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்