Paristamil Navigation Paristamil advert login

அதிநவீன நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய வடகொரியா 

அதிநவீன நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய வடகொரியா 

10 புரட்டாசி 2023 ஞாயிறு 11:13 | பார்வைகள் : 12378


வட கொரியா தொடர் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வட கொரியா சமீபத்தில் அணு ஆயுத ஏவுகணை சுமந்து செல்ல கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியுள்ளது.

“ஹீரோ கிம் குன் ஆக்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல், நீருக்கடியில் இருந்தபடியே அணு ஆயுத ஏவுகணையை ஏவக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் எதிரி இலக்குகளை துல்லியமாகத் குறி வைத்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் புதிய நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நீர்மூழ்கி கப்பலை ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்திற்கு இடையிலான கடல் பிராந்திய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த வடகொரியா திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்