Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : ஈரானிய தூதரக கட்டிடம் மீது தாக்குதல்

பரிஸ் : ஈரானிய தூதரக கட்டிடம் மீது தாக்குதல்

10 புரட்டாசி 2023 ஞாயிறு 11:09 | பார்வைகள் : 11944


பரிசில் உள்ள ஈரானிய தூதரக கட்டிடம் மீது பெற்றோல் எறிகுண்டு தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலாளி தப்பி ஓடியுள்ள நிலையில், காவல்துறையினரால்தேடப்பட்டு வருகிறார். 

 

 

Fresnel வீதியில் உள்ள இந்த கட்டத்தில், நேற்று சனிக்கிழமை காலை திடீரெனபெற்றோல் குண்டு வீசப்பட்டது. ஈரானிய தூதரகம் அமைந்திருக்கும் கட்டிடத்தில்வீசப்பட்ட பெற்றோல் குண்டு,  தூதரகத்துக்கு அருகில் இருக்கும் ஈரானியஆலோசனை அலுவலகத்தின் மீது விழுந்து கட்டிடம் தீப்பற்றியது. 

 

தீயணைப்பு படையினர் வருகை தந்து, தீயை கட்டுப்படுத்தினார்கள். 

 

இச்சம்பவத்தில் எவரும் காயமடைய இல்லை. தாக்குதலாளி சம்பவ இடத்தில்இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்