மொராக்கோ நிலநடுக்கம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
.jpeg)
10 புரட்டாசி 2023 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 14158
மொராக்கோ நகரின் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 மாக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொராக்கோ நகரின் மாரகெச் நகரில் இரவில் 6.8 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் கட்டிடங்கள் தரையோடு தரையாக இடிந்து விழுந்தன.
இரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் என்பதால் வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தில் சிக்கினர்.
முதற்கட்ட தகவல்களின் படி ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் மொராக்கோ நாட்டின் உள்துறை அமைச்சர் வழங்கிய தகவலின் படி, நிலநடுக்கத்தால் இதுவரை 2,012 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் 2,059 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அதில் 1404 பேர் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் மீட்பு படையினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடி வருகின்றனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கை படி மொராக்கோ நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1