Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் 13 வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த லண்டன் யுவதி

கொழும்பில் 13 வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த லண்டன் யுவதி

10 புரட்டாசி 2023 ஞாயிறு 07:58 | பார்வைகள் : 9489


கல்கிஸ்சை அல்விஸ் பிளேஸ் புளுஹோசன் வீடமைப்புத் தொகுதியில் தங்கியிருந்த இங்கிலாந்து பிரஜையான யுவதி ஒருவர் 13 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவததில் 27 வயதான சின்னையா அழகேஸ்வரன் ரோமீனா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவிக்கு முகநூல் சமூக ஊடகத்தின் மூலம் வெள்ளவத்தையில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இளைஞனின் அழைப்புக்கு அமைய இணையத்தளம் வழியாக கல்கிஸ்சை அல்விஸ் பிளேஸில் உள்ள வீட்டை வாடகை எடுத்துள்ள யுவதி கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வந்து அங்கு தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், நாளைய தினம் அவர் மீண்டும் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்லவிருந்ததாக தெரியவருகிறது.

இளைஞனுக்கும் யுவதிக்கும் இடையில் நேற்று அதிகாலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக இதுவரை தெளிவான தடயங்கள் கிடைக்கவில்லை.

எனினும் உயிரிழந்த யுவதியுடன் காதல் தொடர்பை கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்சை பதில் நீதவான் ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை நடத்தியதுடன் கல்கிஸ்சை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்