Paristamil Navigation Paristamil advert login

அழுக்கான ஆடைகளை கண்டறிந்து சுத்தமாக்கும் ரோபோ

அழுக்கான ஆடைகளை கண்டறிந்து சுத்தமாக்கும் ரோபோ

4 மார்கழி 2014 வியாழன் 15:12 | பார்வைகள் : 12134


 அழுக்கான ஆடைகளை தானே கண்டறிந்து சுத்தம் செய்யக்கூடிய ரோபோவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். 

 
அழுக்கான ஆடைகளை கண்டறிந்து அவற்றை தனது கைகளால் எடுத்து கூடையில் இட்டு சலவை இயந்திரத்திற்கு அருகில் கொண்டு செல்லும். சலவை இயந்திரத்தை திறந்து அழுக்கான ஆடைகளை இட்டு மூடக்கூடிய ஆற்றலையும். ஆடைகள் கழுவி உலர்த்தப்பட்ட பின் சரியான முறையில் மடித்து வைக்கவும் இந்த ரோபோவினால் முடியுமாம்.
 
கலிபோர்னியா மாநிலத்தின் பர்க்லீ பல்கலைக்கழகத்தை சேர்ந்த சித்தார்த்த ஸ்ரீவஸ்தவாவும் அவரின் குழுவினரும் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
 
ஆடைகளை சலவை செய்யும் நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கிய கணினி மென்பொருளொன்றை மேற்படி ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
 
இந்த ரோபோவுக்காக 280,000 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாம். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்