சோதனையிலும் சாதனை படைத்த அப்பிள் நிறுவனம்
14 வைகாசி 2016 சனி 00:08 | பார்வைகள் : 13077
தனது முதற்தர தொழில்நுட்பத்தினால் விரைவாக முன்னேறி வரும் அப்பிள் நிறுவனம் அவ்வப்போது சில சரிவுகளை சந்தித்து வருகின்றது.
இதற்கு சம்சுங் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்கு மற்றும் தற்போது சீனாவில் ஐபோன் எனும் சொல்லை பயன்படுத்துவதற்கான தடை என்பவற்றினைக் குறிப்பிடலாம்.
சீனாவில் ஐபோன் எனும் வியாபாரக் குறியீட்டுடன் மற்றுமொரு இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகின்றது.
இதனால் அப்பிள் நிறுவனம் ஐபோன் எனும் பெயரில் கைப்பேசிகளை சீனாவிற்குள் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த சீனா நிறுவனமானது அப்பிள் தயாரிப்புக்கள் அன்றி ஏனைய சாதனங்களுக்கு ஐபோன் என்ற பெயரை பயன்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் அப்பிள் நிறுவனம் இவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் 13.5 மில்லியன் ஐபோன்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இது ஏனைய நிறுவனங்களால் சீனாவுக்கு ஏற்றுமதிய செய்யப்பட்ட கைப்பேசிகளின் தொகையிலும் பல மில்லியன் அதிகமாகும்.
அப்பிள் நிறுவனத்தினை அடுத்து சம்சுங் நிறுவனம் 7.2 மில்லியன் கைப்பேசிகளையும், மைக்ரோசொப்ட் நிறுவனம் 200,000 கைப்பேசிகளையும், மோர்ட்டோரோலா, எல்.ஜி, சோனி என்பன 100,000 கைப்பேசிகளையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.


























Bons Plans
Annuaire
Scan