Paristamil Navigation Paristamil advert login

iPhone நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

iPhone நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

8 மாசி 2017 புதன் 14:18 | பார்வைகள் : 12901


 ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு விழாவையொட்டி ஐபோன் 8 மொடல் போன்கள் மிக சிறப்பான முறையில் தயாராகும் என தெரியவந்துள்ளது.

 
செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஐபோன் நிறுவனத்துக்கு இந்த 2017ஆம் ஆண்டு பத்தாவது ஆண்டாகும்.
 
இதையொட்டி ஐபோன் 8 மொடல் போன்கள் தயாரிப்பு பணிகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே துவங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
 
கடந்த காலாண்டு மொத்த ஐபோன்களின் எண்ணிக்கை 45 மில்லியனில் இருந்து 48 மல்லியன் வரை இருந்தது.
 
இந்நிலையி்ல் ஐபோன் 8 தயாரிப்பிற்காக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7s மொடல்களின் தயாரிப்புகள் குறைக்கப்படலாம் என தெரிகிறது.
 
வரவிருக்கும் ஐபோன் 8ல் 5.5, 5.8 போன்ற டிஸ்ப்ளேயிலும், இதுவரை வந்த மொடல்களில் இல்லாத வண்ணம் ககெமரா இம்முறை அதிகம் மேம்படுத்தப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
 
அதன் படி ஐபோன் 8இல் 3D டூயல் லென்ஸ் கொண்ட ககெமரா அமைப்பு வழங்கப்படலாம்.
 
செப்டம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இந்த மொடலுக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்