Whats app படைத்த புதிய சாதனை
28 ஆடி 2017 வெள்ளி 03:46 | பார்வைகள் : 12158
ஒரு நாளைக்கு 100 கோடி பேர் வாட்ஸ் அப் செயலிலையைப் பயன்படுத்துவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவரிடமும் தகவல்களை எளிதாக நாம் பகிர்ந்து கொள்வதற்கு நாம் பயன்படுத்துவது வாட்ஸ் அப் தான்.
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப்பை ஒரு நாளைக்கு 100 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மாதத்துக்கு 100 கோடி பயனாளர்கள் என்று இருந்த எண்ணிக்கை இப்போது ஒரு நாளைக்கு 100 கோடி என வளர்ச்சி கண்டுள்ளது.
இதே போல நாளொன்றுக்கு 5500 கோடி தகவல்களும், 450 கோடி புகைப்படங்களும் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் பயனாளர்கள் அதிகளவில் இருக்கும் நாடு இந்தியா என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan