ஐபோன்கள் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்!

9 ஆனி 2019 ஞாயிறு 07:19 | பார்வைகள் : 5787
எந்தவொரு மொபைல் சாதனங்களிலும் அதிகளவு டேட்டா கொண்ட அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்யும்போது Wi-Fi வலையமைப்பினை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
மொபைல் டேட்டாவினை பயன்படுத்தும்போது அதிக அளவில் பணம் செலவிடவேண்டியிருப்பதே இதற்கான காரணம் ஆகும்.
இதேபோன்று ஐபோன்களில் 150MB கோப்பு அளவிடை அதிக கொள்ளவுடைய கோப்புக்களை தரவிறக்கம் செய்யும்போது Wi-Fi வலையமைப்பிற்கு மாறுமாறு எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படும்.
இந்தியா உட்பட மேலும் பல நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.
எனினும் தற்போது இந்த எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படுவதில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது 150MB ஆக காணப்பட்ட எல்லை மேலும் 50MB இனால் அதிகரிக்கப்பட்டு 200MB ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 200MB கோப்புக்களை மொபைல் டேட்டாவில் தரவிறக்கம் செய்யும்போது மேற்கண்ட எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்பட மாட்டாது.
200MB ஐ விட அதிகரிக்கும்போது மாத்திரமே எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படும்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025