முகக்கவசம் அணிவதை வலியுறுத்தும் ரோபோ!
18 புரட்டாசி 2020 வெள்ளி 08:00 | பார்வைகள் : 16157
ஜப்பானில் பொதுவெளிக்கு வருவோரை முகக் கவசம் அணியுமாறும், அணிந்திருந்தோருக்கு நன்றி கூறும் இயந்திர மனிதன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் என்ற நிறுவனம் பெப்பர் என்ற பெயரில் ரோபோவைத் தயாரித்துள்ளது. இந்த ரோபோ, 47 இன்ச் உயரத்துடன் நெஞ்சினில் சிறிய அளவு கம்ப்யூட்டரைச் சுமந்தபடி நிற்கிறது.
வணிக வளாகம் அல்லது திரையரங்கு வாசலில் நிற்கும் பெப்பர் வரும் வாடிக்கையாளர்களின் முகத்தை படம் பிடித்துக் கொள்கிறது. அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் நன்றி கூறி உள்ளே அனுப்பியும், அணியாமலிருந்தால் அணியுமாறும் வலியுறுத்தி வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan