Google குரோம் வழங்கியுள்ள புதிய வசதி!

5 மாசி 2021 வெள்ளி 09:26 | பார்வைகள் : 14375
முன்னணி இணைய உலாவியாக திகழும் கூகுளின் குரோமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது Grid View வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ் வசதியின் ஊடாக இணையப் பக்கங்களை விரைவாக மீண்டும் பார்வையிடுவதற்காக அவற்றின் ஐகான்கள் சேமிக்கப்படுகின்றமை இலகுபடுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி ஒரே வகையான வெவ்வேறு இணையத்தளங்களை குழுக்களாக சேமித்து வைத்திருக்கவும் முடியும்.
இவ் வசதியினை கூகுள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள குரோம் 88 பதிப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி தற்போது அனைத்து அன்ரோயிட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியில் இவ் வசதி கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
இவ் வசதியினை பயன்படுத்த விரும்பாதவர்கள் குரோம் உலாவியின் முகவரிப் பட்டையினுள் chrome://flags/#enable-tab-grid-layout என தட்டச்சு செய்து குறித்த வசதியினை Disabled செய்யவும் முடியும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025