வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பு
24 மாசி 2023 வெள்ளி 08:29 | பார்வைகள் : 10667
வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் பயனர்கள் அனுப்பிய செய்தியை திருத்தம் செய்யும் புதிய அம்சம் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது, இந்த அம்சம் பீட்டா அளவிலான சோதனையில் இருப்பதாக வாட்ஸ்அப் குறித்த மேம்பாடுகளை பின்தொடர்ந்து வரும் Wabetainfo தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அனுப்பிய செய்தியை திருத்தம் செய்யவும், அதில் கூடுதல் தகவல்களை பயனர்கள் சேர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இது முதலில் ஐஓஎஸ் இயங்குதள போன்களை கொண்ட பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் பின்னர் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என்றும் தெரியவருகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan