மொரோக்காவில் சக்தி வாய்ந்த பூகம்பம் - 300 பேர் பலி
9 புரட்டாசி 2023 சனி 08:48 | பார்வைகள் : 11504
மொராக்கோவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதில் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.
இது வரையான காலப்பகுதில் (08.09.2023) நள்ளிரவு வேளையில் மொராக்கோவின் அட்லஸ் மலைப்பகுதியில் 6.8 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
பூகம்பத்தினால் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மொரோக்கோ - மராகெச் என்ற நகரத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதுடன் 156 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ச்சியான சிறிய அதிர்வுகள் காணப்படலாம் என மொராக்கோவின் விமானப்படை எச்சரித்துள்ளது.
சேதமடைந்த கட்டிடங்களையும் மக்கள் அச்சத்துடன் வீதிகளுக்கு தப்பியோடுவதையும் சிலர் புகைமண்டலத்திற்கு நடுவில் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan