அரசியல் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை

19 ஆடி 2023 புதன் 14:45 | பார்வைகள் : 9178
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரட்ணம் ஆகிய இருவருக்கே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறி 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் மற்றும் வெடிப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சண்முகரட்ணம் சண்முகராஜன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட இருவரும் இன்று மாலை சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்ததாகவும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவிக்கிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025