அந்தமான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்....!
.jpg)
11 ஆடி 2023 செவ்வாய் 04:49 | பார்வைகள் : 15819
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (09-07-2023) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் அந்தமான் தீவின் கேம்ப் பெல் பே பகுதியில் ஏற்பட்டுள்ளது.
70 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்தமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.
மேலும் நிலநடுக்கத்தால் சில தற்காலிக வீடுகள் சேதமடைந்தன.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.