Maroc நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 820 தாக அதிகரித்து உள்ளது. உதவிக்கரம் நீட்டுகிறது France.
9 புரட்டாசி 2023 சனி 10:27 | பார்வைகள் : 13928
Maroc நாட்டில் நேற்று இரவு நான்கு நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இந்த செய்தி எழுதப்படும் வரை பலி எண்ணிக்கை 820 ஆக உள்ளது மேலும் அதிகரிக்கலாம் என Maroc நாட்டின் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. 329 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் 51 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இன்று அதிகாலை பிரான்ஸ் அரசதலைவர் Emmanuel Macron தனது Twitter பக்கத்தில் "Maroc செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது, உங்கள் கைகளை பற்றிக் கொண்டு பிரான்ஸ் தேசம் உதவிகளை வழங்க தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
நிற்பதற்கும் அதிகமான விசேட பயிற்சி பெற்ற பிரான்ஸ் தீயணைப்பு படையினர் Maroc நோக்கி விரைவுள்ளனர். அத்தோடு உணவு, மருந்து, தற்காலிக தங்கிமிடங்களை அமைக்கும் பொருட்களுடன் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள மற்றும் ஒரு உதவிக் குழுவும் Maroc செல்லவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Maroc கில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள அவசரத் தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது +212 53 76 89 900 இந்த இலக்கம் 24/24 இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Maroc தேசத்துடன் சகோதர உறவைக் கொண்டுள்ள பிரான்ஸ் மக்களுக்கு குறித்த அனர்த்தம் மிகுந்த கவலையளிக்கிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan