குழந்தைகள் பாடசாலை உணவகத்தில் (cantine) உணவருந்தவில்லையா? பெற்றோருக்கு ஐந்து Euros அபராதம்.
9 புரட்டாசி 2023 சனி 07:58 | பார்வைகள் : 13481
பாடசாலை உணவகங்களில் விரையமாகும் உணவுகளை தவிர்க்க இந்த புதிய நடைமுறையை நகரசபை முன்னெடுத்து உள்ளது.
Orléans நகரில் உள்ள Loiret நகரசபையே குறித்த நடைமுறையை முன்னெடுத்து உள்ளது. இந்த நகரசபைசையின் கீழ் இயங்கும் 57 அரச பள்ளிக்கூடங்களில் கல்விகற்கும் மாணவர்கள் முன்னறிவித்தல் இன்றி பாடசாலை உணவகத்தில் உணவருந்துவதை தவிர்த்தானல் குறித்த மாணவரின் பெற்றோர்கள் ஐந்து Euros அபராதம் செலுத்த வேண்டும் என நகரசபையின் கல்விக்கு பொறுப்பான துணை நகர முதல்வர் Régine Bréant அவர்கள் புதிய நடைமுறை ஒன்றை இந்த புதிய கல்வியாண்டில் முன்வைத்துள்ளார்.
இந்த நடைமுறை பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு தாயார் தெரிவிக்கும் போது "இது ஒரு தண்டனை எங்களுக்கு இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
மற்றும் ஒரு தாயார் இன்னும் ஒருபடி மேலே சென்று குறித்த நடைமுறைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்து கையெழுத்து வேட்டையை நடத்தியுள்ளார். இதுவரை சுமார் 600 கையெழுத்துக்கள் பதிவாகியுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த நடைமுறை குறித்து கருத்துத் தெரிவித்த துணை நகர முதல்வர் Régine Bréant "57 பாடசாலைகளில் நாள் ஒன்றுக்கு 200 சாப்பாடுங்கள் உண்ணப்படாமல் போகிறது இதனால் நகரசபைக்கு பெரும் நிதி விரையமாகிறது, பாடசாலை என்பது மாணவர்கள், நிர்வாகம்,பெற்றோர்களினால் கட்டமைக்கப்பட்ட இடம் எனவே பெற்றோர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் " என்கிறார்.
இருப்பினும் பெற்றோர்கள் மத்தியில் காணப்படும் அதிர்வலைகள் குறைந்ததாக இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan