Paristamil Navigation Paristamil advert login

விஷம் கொடுங்க

விஷம் கொடுங்க

13 புரட்டாசி 2012 வியாழன் 12:46 | பார்வைகள் : 16364


 ஒரு பெண் அவசரம் அவசரமாக மருந்து கடைக்கு ஓடி வந்து ஆத்திரமும் அழுகையுமாக எனக்கு விஷபாட்டில் சீக்கிரம் கொடுங்க என்று கேட்டாள்.

 
அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் எதுக்கு விஷம் கேட்கறீங்க என்றார்.
 
என் கணவனை கொல்வதற்குத் தான் என்றாள். அந்த பெண்.
 
உடனே பதறிய கடைக்காரன் டாக்டர் சீட்டு இல்லாமல் விஷம் தரமாட்டேன் என்று கூறினார்.
 
உடனே அந்தப் பெண் என் கணவன் மோசமானவன், நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று கூறி இந்த போட்டோவை பாருங்கள் எனக் காட்டினாள்.
 
அதை பார்த்த கடைக்காரன் கடும் கோபமாகி இந்த அயோக்கியனை உடனே கொல்லுங்கள் என விஷபாட்டிலை எடுத்து கொடுத்தான்.
 
ஏனென்றால் போட்டாவில் அந்த பெண்ணின் கணவனுடன் உல்லாசமாக இருந்தது மருந்து கடைக்காரனின் மனைவி.

வர்த்தக‌ விளம்பரங்கள்