தம்பதியருக்குள் சண்டை வராமல் தடுக்கும் மருந்து

16 மார்கழி 2013 திங்கள் 13:39 | பார்வைகள் : 12744
திருமணம் ஆன ஒரு பெண் ஒரு சாமியாரிடம் வந்து, “”சுவாமி… கல்யாணமாகி இரண்டு வருஷம்தான் ஆகுது. ஆனால் எனக்கும் என் கணவனுக்கும் அடிக்கடி வாய்ச் சண்டை வருது. வாழ்க்கை நரகமாயிருக்கு. நீங்கதான் யோசனை சொல்லணும்” என்று சொல்லி வணங்கினாள்.
சாமியார் அவளைப் பார்த்து புன்னகை புரிந்தார்.
அவளிடம் மருந்துள்ள ஒரு பாட்டிலை நீட்டி, “”இதிலே இனிப்பு மருந்து உள்ளது. உன் கணவர் உன்னிடம் கோபமாகப் பேசும்போது நீ இந்த மருந்தை வாயில் ஊற்றிக் கொண்டு விழுங்கிவிடாமல் சிறிது நேரம் இரு. அவர் கத்தி முடித்ததும் மருந்தை விழுங்கி விடு. எல்லாம் சரியாகிவிடும்” என்றார் சாந்தமாக.
அந்தப் பெண் நம்பிக்கையில்லாமல் அந்த மருந்தை வாங்கிச் சென்றாள்.
இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் வந்தாள்.
“”சுவாமி… இரண்டு மாதங்களாக எனக்கும் என் கணவருக்கும் சண்டையே வரவில்லை. நீங்கள் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்கிறது. மருந்து தீர்ந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் மருந்து கொடுங்கள்” என்றாள்.
சாமியார் சிரித்தார். “”இது மருந்தல்ல… சர்க்கரைத் தண்ணீர். தேவையானால் நீயே தயார் செய்து நான் சொல்லியபடி பயன்படுத்திக் கொள்’ என்றார்.