எப்பூடி.... என் சாமர்த்தியம் டியர் !!!

9 தை 2014 வியாழன் 10:55 | பார்வைகள் : 13394
வீட்டிற்குச் செல்ல வழி மறந்து பூங்கா ஒன்றில் சுற்றிக் கொண்டிருந்த தாத்தா ஒருவரை போலீசார் கண்டார்கள். அவரது முகவரியைக் கேட்டுக் குறித்துக் கொண்ட அவர்கள், அவரை வீட்டிற்கு தங்களது வாகனத்தில் அழைத்து வந்தார்கள். வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்பதைக் கண்ட பாட்டி, கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தார். பிறகு அங்கு என்ன நடக்கிறது எனப் பாருங்களேன்....
போலீஸ்: மேடம், இவர் யாரென்று உங்களுக்குத் தெரிகிறதா?
பாட்டி: இவர் எனது கணவர் தான். இவரை எங்கிருந்து அழைத்து வருகிறீர்கள்..?
போலீஸ்: வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தார்....
பாட்டி (ஆச்சர்யத்துடன்) : அப்படியா.....
போலீஸ்: ஏன் இவ்வளவு ஆச்சர்யம் காட்டுகிறீர்கள் மேடம்....
பாட்டி: இல்லை.. கடந்த 30 வருடங்களாக எனது கணவர் அந்த பூங்காவிற்குச் சென்று தான் நடைபயிற்சி செய்து வருகிறார். இன்று மட்டும் எப்படி வீட்டுப் பாதை மறந்தார் எனத் தெரியவில்லை...
போலீஸ்: வயதாகிறதல்லாவா அது தான் ஞாபகமறதி... பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் மேடம்
பாட்டி: நன்றி சார்....
போலீஸார் புறப்பட்டவுடன் பாட்டி அதே குழப்பத்துடன் தாத்தாவைப் பார்க்கிறார். பின், தாத்தா பாட்டிக்கு மட்டும் கேட்கும் மெதுவானக் குரலில் சொல்கிறார்....
தாத்தா : எனக்கு ஞாபக மறதியெல்லாம் ஒன்றுமில்லை டியர். வீட்டிற்கு நடந்து வர சற்றுக் களைப்பாக இருந்தது. அதான் இப்படி ஒரு நாடகமாடினேன்...