Paristamil Navigation Paristamil advert login

இனிய நாள்..

இனிய நாள்..

28 தை 2014 செவ்வாய் 08:20 | பார்வைகள் : 13220


ஒரு நாள் இரவு.

கணவன் மனைவிக்குள் பயங்கர சண்டை ....

மறு நாள் கண்விழித்ததும், கணவன் மனைவியிடம் சொன்னான்,

"இந்த நாள் இனிய நாளாகட்டும்"

மனைவிக்கோ குழப்பம்... என்றும் இல்லாமல் இன்று சொல்கிறாரே என்று.

மறுநாள் காலையிலும் அதேபோல், மனைவியிடம் அதிகாலையில் சென்று "இந்த நாள் இனிய நாளாகட்டும்' என்றார் கணவர்.

மீண்டும் மனைவிக்கு குழப்பம்.

மூன்றாம் நாள், நான்காம் நாள் என கிட்டத்தட்ட ஒரு வார காலம் இதே போல் அதிகாலையில் மனைவியைச் சந்தித்து, "இந்த நாள் இனியநாளாகட்டும்" எனச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கணவர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவி, தனது சந்தேகத்தை கணவரிடமே கேட்டு தெளிவு படுத்தி விட முடிவு செய்தாள்.

மறுநாள் வழக்கம் போல், "இந்த நாள்.." என்று வாயைத் திறந்தார் கணவர்.

உடனே அவரை வழிமறித்த மனைவி,

"முன்பெல்லாம் நீங்கள் இப்படி காலையில் வாழ்த்து சொல்ல மாட்டீர்களே... இப்போது என்ன ஆனது உங்களுக்கு..?" என வினவினாள்.

சிரித்துக் கொண்டே கணவன் கூறினான்,

"அடி அசடே, இது கூட புரியவில்லையா உனக்கு.... அன்று சண்டையில் என்ன கூறினாய் என நினைவிருக்கிறதா..?"

"இல்லையே...."

"உங்களை விட்டு பிரிந்து செல்லும் இனிய நாள் எப்போது எனக்கு வரப்போகிறாதோ என வருத்தப்பட்டாயே... அதான், ஒவ்வொரு நாளும் இனிய நாள் தான் என்பதை உனக்கு நினைவூட்டினேன்... ஆனால் நீ தான் தொலைந்து போக மாட்டேன் என்கிறாய்..."

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்