Paristamil Navigation Paristamil advert login

அடப்பாவி.. நீதானா அவன்..!?

அடப்பாவி.. நீதானா அவன்..!?

22 வைகாசி 2014 வியாழன் 18:29 | பார்வைகள் : 14288


 ஒரு சர்தார் சாப்பிட்ட களைப்பில் பூங்காவில் படுத்திருந்தார். அப்போது அங்கு ஒரு ஆங்கிலேயர் வந்தார். அவரும், சர்தார்ஜியும் பேசிக் கொண்ட பேச்சைப் பாருங்க...

 
ஆங்கிலேயர் - Are u Relaxing?
 
சர்தார்ஜி - இல்லைப்பா, நான் கோபால் சிங்.
 
ஆங்கிலேயர் - Are u Relaxing?
 
சர்தார்ஜி - இல்லைய்யா... என் பேரு கோபால் சிங்.
 
ஆங்கிலேயர் - Are u Relaxing?
 
சர்தார்ஜி - அரே பய்... என் பேரு கோபால் சிங், கோபால் சிங், கோபால் சிங்..
 
கோபத்துடன் சொல்லி விட்டு வேறு இடத்தில் போய் தூங்கச் சென்றார். போன இடத்தில் ஒரு வெள்ளைக்காரர் படுத்திருந்தார். அவரை எழுப்ப முயன்ற சர்தார்ஜி, அவரிடம் Are u Relaxing? என்று கேட்டார். அதற்கு அந்த வெள்ளைக்காரர் எஸ் என்று கூறவும் கோபமாகிப் போன சர்தார்ஜி, ஏய்யா நீ இங்கயா படுத்திருக்கே. இவ்வளவு நேரம் என்னைப் போட்டுத் துளைத்து விட்டானே அந்த ஆங்கிலேயன்.. என்று படு டென்ஷனாக கூறியபடி அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து போனார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்