Paristamil Navigation Paristamil advert login

மகிழ்ச்சிக்கு காரணம்!

மகிழ்ச்சிக்கு காரணம்!

19 சித்திரை 2013 வெள்ளி 05:50 | பார்வைகள் : 16475


 ஒருவனுக்கு லாட்டரியில் ஒரு கோடிரூயாய் பரிசு விழுந்து விட்டது. சிறிது நேரம் கழித்து, அவனுடைய பக்கத்து வீட்டுக்காரன் அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்கும் மிக மகிழ்ச்சியோடு இனிப்பு வழங்கிக் கொண்டிருதந்தான்.

 
இனிப்பைக் பெற்றுக்கொண்ட ஒருவர் கேட்டார், ”உன் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு கோடி ரூபாய் விழுந்ததற்காகவா பொறாமைப் படாமல் எல்லோருக்கும் நீ இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறாய்… உனக்கு அவன் மேல் அவ்வளவு பாசமா?”
 
”இல்லை…அவன் அந்த லாட்டரி சீட்டை தொலைத்துவிட்டான் ” மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னான் இவன்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்