Paristamil Navigation Paristamil advert login

தவறுக்கு தண்டனை

தவறுக்கு தண்டனை

3 வைகாசி 2013 வெள்ளி 10:59 | பார்வைகள் : 13566


 தன் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல பழக்கங்களைச் சொல்லித் தர வேண்டும் என்று விரும்பிய தந்தை, தினம்தோறும் அவர்களுக்கு நல்லது, கெட்டதுகளை எடுத்துச் சொல்லி வந்தார். ஒரு பெரிய உண்டியலை வாங்கி வந்து தனது பிள்ளைகளிடம் சொன்னார்:

 
""இனி மேல் யார் தப்பு செய்தாலும் இந்த உண்டியலில் அபராதத் தொகையாக ஒரு ரூபாய் போட வேண்டும்''
 
பிள்ளைகளும் தவறு செய்யும்போதெல்லாம் உண்டியலில் ஒரு ரூபாயைப் போட்டு வந்தார்கள். மாத இறுதியில் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும்போது ரூ.90 இருந்தது.
 
தந்தைக்கோ பயங்கரமாகக் கோபம் வந்தது. ""இந்த மாதம் சராசரியாக ஆளுக்கு ஒரு தப்பு செய்திருக்கிறீர்கள். இனி மேல் தப்பு செய்தால் இரண்டு ரூபாய் போட வேண்டும்'' கோபத்துடன் உத்தரவிட்டார்.
 
பிள்ளைகளும் அடுத்து தவறு செய்யும் போது இரண்டு ரூபாய் போட்டு வந்தார்கள்.
 
அந்த மாதக் கடைசியில் உண்டியலைத் திறந்து பார்த்தால் வெறும் 2 ரூபாய் மட்டும் இருந்தது. தந்தையால் அதை நம்ப முடியவில்லை. ""நேற்று கூட உண்டியலைத் தூக்கிப் பார்த்தேன். கனமாக இருந்தது. யார் இந்த 2 ரூபாயைப் போட்டது?'' என்று கேட்டார் கோபமாக.
 
அவருடைய ஒரு மகன் வந்து சொன்னான்:
 
""நீங்கள் சொன்னதைத்தான் கடைப்பிடித்தேன் அப்பா. இன்று உண்டியலைத் திறந்து அதில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்துவிட்டேன். அந்தத் தவறுக்காக இரண்டு ரூபாயைப் போட்டிருக்கிறேன்'

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்