ரயிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?...............

29 வைகாசி 2013 புதன் 10:02 | பார்வைகள் : 14420
ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய் விட்டான்.
அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது.
சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான்.
"இதோ இந்த பெட்டில் படுத்து பாருங்கள் தெரியும்" என்று சொல்ல அவனும் ரயிலுக்காக படுத்து காத்திருந்தான்.
அப்போது பார்த்து அவள் கணவன் வந்தான்,"இங்கென்ன செய்கிறாய்?"
"அது...நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?"
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3