அறிவாளி யார்?

25 வைகாசி 2013 சனி 16:56 | பார்வைகள் : 15305
கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், ''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''
வாலி சொன்னார், ''ராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும் போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''
அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், ''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''
வாலி சிரித்துக் கொண்டே, ''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!'' என்றார்.