Paristamil Navigation Paristamil advert login

முட்டாள் பணக்காரர்....

முட்டாள் பணக்காரர்....

13 பங்குனி 2015 வெள்ளி 09:48 | பார்வைகள் : 15078


 ஒரு ஊரில் முட்டாள் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.

 
வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். 
 
அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக்காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார் 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்