இதுக்கு பேருதான் கொரில்லா தாக்குதலா...?

14 ஐப்பசி 2014 செவ்வாய் 11:02 | பார்வைகள் : 13264
ஒரு நாள் அதிகாலை கண் விழித்த போது தன் வீட்டின் மேல் கூரையில் கொரில்லா ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டார் ஒருவர்.
உடனடியாக, கொரில்லா பிடிப்பவருக்கு போன் செய்தார். பிறகு என்ன நடக்கிறது பாருங்கள்....
கிட்டத்தட்ட போன் செய்து 30 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரில்லா பிடிப்பவருடன் நாய், கிரிக்கெட் மட்டைமற்றும் ஏணி ஒன்றும் இருந்தது.
ஆச்சர்யத்துடன் இதெல்லாம் எதற்கு எனக் கேட்டார் வீட்டின் உரிமையாளர்.
கொரில்லா பிடிப்பவர் : நான் இந்த ஏணியில் ஏறி, கிரிக்கெட் மட்டையால் கொரில்லாவைக் கீழே தள்ளி விடுவேன்...
வீட்டின் உரிமையாளர் : சரி, அப்படியென்றால் இந்த நாய் எதற்கு..?
கொரில்லா பிடிப்பவர் : கீழே விழும் கொரில்லாவைப் பிடித்துக் கொண்டு சென்று கூண்டில் அடைப்பது நாயின் வேலை...
கடைசியாக ஏணியில் ஏறுவதற்கு முன், துப்பாக்கி ஒன்றை கையில் எடுக்கிறார் கொரில்லா பிடிப்பவர்...
வீட்டின் உரிமையாளார் : இது எதற்காக...?
கொரில்லா பிடிப்பவர் : ஒருவேளை மேலே ஏறிய என்னை கொரில்லா தாக்க முற்பட்டால், எனது நாய் என்னைச் சுட்டுடும். கொரில்லா கிட்ட அடி வாங்கி சாகறதுக்கு இது பரவாயில்லல......
வீட்டின் உரிமையாளரின் மைண்ட்வாய்ஸ்...( இதுக்கு அந்த கொரில்லாவே பெட்டர் )
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1