மனைவியைக் காணோம் சார்...!

5 தை 2015 திங்கள் 10:36 | பார்வைகள் : 13197
கணவர் ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கச் சென்றார். அவரிடம் மனைவியின் அடையாளங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த உரையாடல்...
கணவர்: ஷாப்பிங் போறேன்னு நேத்து வெளில போன என் மனைவி இன்னும் வீட்டுக்கு வரலை சார்
போலீஸ்: அப்டியா.... உங்க மனைவி என்ன உயரம் இருப்பாங்க ?
கணவர்: சரியா தெரியலைங்களே சார்
போலீஸ்; சரி, அவங்க கண்ணு என்ன கலர்ல இருக்கும் ?
கணவர்: அடிக்கடி லென்ஸ் மாத்திருவாங்க சார்
போலீஸ்: அவங்க முடி என்ன கலர்ல இருக்கும் ?
கணவன்: அதையும் அடிக்கடி கலர் மாத்திடுவா சார்
போலீஸ்: காணாமல் போனப்ப அவங்க என்ன கலர் டிரஸ் போட்ருந்தாங்க...
கணவர்: ஞாபகமில்லையே சார்
போலீஸ்: சரி, எந்த வாகனத்துல போனாங்க..?
கணவர்: அது பிளாக் கலர் ஆடி கார் சார்.
போலீஸ்: சரி கார் எப்படி இருக்கும்?
கணவர்: அது கருப்பு நிற ஆடி ஏ8 சார். 3.0 லிட்டர், வி6 என்ஜின் பொருத்தப்பட்டது, 333 ஹார்ஸ் பவர் கொண்டது. எட்டு ஸ்பீட், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஸன், மானுவல் மோடும் உண்டு. எல்இடி ஹெட்லைட் கொண்டது. காரின் முன்புற டோருக்கு பக்கத்தில் லேசான ஸ்கிராட்ச் இருக்கும்... (இதற்கு மேல் காரைப் பற்றிக் கூற முடியாமல் கதறி அழத் தொடங்கினார் கணவர் )
போலீஸ்: கவலைப் படாதீங்க சார். உங்க காரைக் கண்டிப்பா கண்டுபிடிச்சு கொடுத்துடறோம் !
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025