ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது...!
24 சித்திரை 2021 சனி 10:46 | பார்வைகள் : 13640
ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்…
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா… ???
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்…!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல… அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்… பொல்லாத பிராப்ளம்…
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே…
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்…
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்….
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்…
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்…
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்…!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்…
காலம் ஓடியது…..
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்….
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்…
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்…
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்….
அவனே எனக்கு பேரனும் ஆனான்…
என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்…
என் சித்திக்கு தாய் அல்லவா?
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று…
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்…
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்…
.
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்…
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan