உலகின் அதிக விஷமுடைய பறவைகள்! உங்களுக்கு தெரியுமா ?
17 ஆடி 2012 செவ்வாய் 11:01 | பார்வைகள் : 15067
உலகின் மிக விஷமுடைய உயிரினம் சில மீன்களும் சில பாம்புகளும் என்பது நமக்கு தெரியும். ஆனால் சில பறவைகள் கூட அதிக விஷமுடையன என்பதும் அவற்றை உண்பதாலும் தொடுவதாலும் விஷத் தன்மை ஏற்படும் என்பது தெரியுமா?
1.Hooded Pitohui (Pitohui dichrous):
இந்த இனப்பறவைகள் நியூகினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இதன் தோலிலும் இறகிலும் மூளையை தாக்கும் விஷம் உள்ளது. இந்தப் பண்பு எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதற்கே. இந்த இனத்தில் ஆறு வகையான பறவைகள் உள்ளன அனைத்தும் விஷமுடயதே. உலகின் மிக அதிக விஷமுடைய பறவை இதுதான். இந்த விஷத்தினை சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. பொதுவாக உணவின் மூலமோ அல்லது பிற விஷ உயிரினங்களின் மூலமோ பெற்றுக்கொள்ளும்.

2.Variable Pitohui:
இந்த பறவைகள் இந்தோனிசியாவிலும், பபுவா நியூகினி தீவுகளிலும் காணப்படும்.

3.Blue-capped Ifrita:
இதுவும் நியூகினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இவை விஷத்தினை உணவின் மூலமாகவும் Choresine beetles என்னும் பூச்சியின் உடலில் இருந்தும் எடுத்துகொள்கிறது.

4. Rufous or Little Shrike-thrush:
பார்ப்பதற்கு அழகாகவும் அமைதியாகவும் தெரியும் இந்த பறவையும் அதிக விஷமுடையதாகும். இவை ஆஸ்ட்ரேலியா, இந்தோனிசியா மற்றும் பபுவா நியூகினி தீவுகளிலும் காணப்படும். இந்த பறவையின் விஷம் தென் அமெரிக்கா காடுகளில் காணப்படும் விஷ தவளைகளின் விஷத்தை ஒத்திருக்கும்.

6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1