Paristamil Navigation Paristamil advert login

கண்ணாடி பற்றிய தகவல்கள்

கண்ணாடி பற்றிய தகவல்கள்

21 கார்த்திகை 2012 புதன் 16:10 | பார்வைகள் : 16571


சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். 

 
கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
 
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.
 
இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர். கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்