Paristamil Navigation Paristamil advert login

சரித்திரம் மிக்க சுதந்திர தேவி சிலை

சரித்திரம் மிக்க சுதந்திர தேவி சிலை

28 தை 2013 திங்கள் 10:38 | பார்வைகள் : 15838


அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது. 

 
அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்திருப்பீர்களே? ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா? உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும் சுதந்திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புறவின் அடையாளம் என்பது தெரியுமா உங்களுக்கு? ஆம் பிரான்சு அமெரிக்காவுக்கு வழங்கிய பரிசு தான் சுதந்திர தேவி சிலை. 
 
பண்டைய ரோமின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் லிபர்டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத்துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும் 7 நீட்சிகள் - 7 கடல்களை யும் 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம் அறிவையும்அதிலிருக்கும் தேதி ஜூலை 4 1887 என்று அமெரிக்கா உருவான நாளையும் குறிக்கும். 
 
151 அடி உயரமுடைய இச்சிலை 65 அடி உயரமுடைய அடித்தளம் மற்றும் 89 அடி உயரமுடைய பீடத்தின் மேல் பிரம்மாண்டமாக நிறுத்தப்பட்டது. இச்சிலையை 90.7 டன் செம்பும் 113.4 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் 1886 அக்டோபர் 28 அன்று சிலையை க்ரோவர் திறந்து வைத்தார். 
 
1902ஆம் ஆண்டு வரை இச்சிலை கலங்கரை விளக்காகவும் பயன்பட்டது. 
இச்சிலையின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றை வளைவு படிக்கட்டுகள் மூலம் (354 படிக்கட்டுகள்) சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தை அடைய முடியும். 
ஏறி நின்று ரசிப்பது எத்தனை அற்புதமான விசயம். 
 
ஒரே நேரத்தில் அங்கிருக்கும் 25 ஜன்னல்கள் வழியாக 30 பேர் நியூயார்க் நகரைப் பார்வையிடலாம். பிரம்மாண்டமான இச்சிலையை அருகிலிருந்து பார்ப்பதே அலாதி சுகம் என்றால் அதன் உச்சியில் 
 
சிலையின் பீடத்தில் புதிய கொலாசஸ் என்ற எம்மா லாஸரஸின் கவிதை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக இச்சிலையை வழங்கிய பிரான்சில் இதன் மாதிரி உருவம் வைக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 1886ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அர்ப்பணித்தது. இந்த புகழ்மிக்க சிலையை ஆண்டு தோறும் 35 லட்சம் மக்கள் பார்த்து செல்கின்றனர். 
 
கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் இந்த சிலையின் உள் பகுதியில் ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சரித்திரம் மிக்க சிலை 21ஆம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கிறது 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்