நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி..?!

29 சித்திரை 2013 திங்கள் 07:58 | பார்வைகள் : 15195
சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அதனை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.இலேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன.
பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும்.ஜப்பானில்தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக இலேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.
பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேஷியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ஆம் ஆண்டு ஆகச்டு மாதம் 26ஆம் நாள் இந்தோனேஷியா அருகே யுள்ள கிரகடோவாத் தீவில் கராங் எனும் எரிமலை பயங்கரமாகக் கக்கியபோது நிலநடுக்கம் ஏற்பட்டு அத்தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.
பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர்.
இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவில்லை. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.
பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை.
பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவேதான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025