இன்று பிரான்ஸ் அரசதலைவர் Emmanuel Macron உரையை புறக்கணித்த மக்கள்?
8 புரட்டாசி 2023 வெள்ளி 21:18 | பார்வைகள் : 18904
இன்று Rugby விளையாட்டின் உலகக்கோப்பைக்கான போட்டிகள் parisசின் புறநகர்ப் பகுதியான Seine-Saint-Denis பகுதியில் அமைந்துள்ள, Stade de France மைதானத்தில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகியது. இன்றும் (08/09) ஆரம்பமாகிய போட்டிகள் எதிர்வரும் 28 செப்டம்பர் வரை நடைபெறவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரான்ஸ் அரசதலைவர் Emmanuel Macron ஆரம்ப உரையை ஆரம்பிக்க வந்த போது அங்கு கூடியிருந்த மக்கள் வெள்ளம், Emmanuel Macron உரையை வெளியே கேட்காத வண்ணம் கூக்குரல் எழுப்பி தடை செய்தனர். அந்த எதிர்ப்பு குரல்களை வழமைபோல புறக்கணித்ததுவிட்டு Emmanuel Macron உரையாற்றினார்.
இந்த எதிர்பாராத நிகழ்வு மக்கள் Emmanuel Macron மீது கொண்டுள்ள வெறுப்பு என பொது ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அரசுக்கு சார்பான ஊடகங்கள் "இது ஒரு ஆரவாரமான வரவேற்பு" என புகழாரம் சூட்டியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan